அரசியல்செய்திகள்

ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற குழுக்கூட்டம் நாளை ?

ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற குழுக்கூட்டம், கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நாளை நடைபெறவுள்ளது.

எதிர்கட்சி தலைவர் பதவி தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக கட்சி பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

சிறிகொத்தவில் நாளை மாலை 3 மணிக்கு நடைபெறவுள்ள நாடாளுமன்ற குழுக்கூட்டத்திற்கு, கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படடுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

கட்சியின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்தும் இந்த கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button