செய்திகள்

ஐக்கிய மக்கள் சக்தி பேரணி இன்று கண்டியிலிருந்து ஆரம்பம்…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி ஐக்கிய மக்கள் சக்தி கண்டியிலிருந்து கொழும்பிற்கு ஏற்பாடு செய்துள்ள பேரணி இன்று(26) ஆரம்பமாகவுள்ளது.

‘ஐக்கிய மக்கள் பேரணி’ என்ற தொனிப்பொருளிலில் ஆரம்பமாகவுள்ள இந்த பேரணி, 5 நாட்கள் தொடரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

அதற்கமைய இன்றைய தினம் கண்டி – தலதா மாளிகையில் ஆரம்பமாகி 30 ஆம் திகதி கொழும்பில் நிறைவடையவுள்ளது.

அதற்கமைய 5 கட்டங்களின் அடிப்படையில் இந்த பேரணி இடம்பெறவுள்ளதுடன், 26 ஆம் திகதி கண்டியிலிருந்து மாவனெல்ல வரையும் , 27 ஆம் திகதி மாவனெல்லையிலிருந்து கலிகமுவ, 28 ஆம் திகதி கலிகமுவையிலிருந்து தனோவிட, 29 ஆம் திகதி தனோவிடவிலிருந்து யக்கல , 30 ஆம் திகதி யக்கலையிலிருந்து பேலியகொட வரையும் குறித்த பேரணி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button