செய்திகள்விளையாட்டு

ஐசிசி பிரதம நிறைவேற்று அதிகாரி மனூ சாவ்னி பதவி நீக்கம்

தமது பிரதம நிறைவேற்று அதிகாரி மனு சாவ்னியை (Manu Sawhney) உடன் அமுலாகும் வகையில் தமது நிறுவனத்திலிருந்து நீக்கியுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐசிசி) தெரிவித்துள்ளது.

உள்ளக விசாரணையொன்றுக்கு அமைய அவரது ஒழுங்கீனமான நடத்தை தொடர்பில் கண்டறியப்பட்டதையடுத்து அவர் நீக்கப்பட்டுள்ளார். ஐசிசி தலைவர் கிரெக் பார்க்லே தலைமையில் நேற்று நடந்த அவசர கூட்டத்தில் பணிப்பாளர் சபையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

இதன்பின்னர், ஜெப்ஃ அலெடைஸ், ஐசிசியின் பதில் பிரதம நிறைவேற்று அதிகாரியாக செயற்படுவார் என சர்வதேச கிரிக்கெட் பேரவை விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button