செய்திகள்விளையாட்டு

‘ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம்’ விருதை பெறும் குமார் சங்கக்கார.!

1996 – 2015 க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் கிரிக்கெட் விளையாட்டுக்கு பெரும் பங்களிப்பை செய்த வீரர்களுக்கான ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித் தலைவர் குமார் சங்கக்கார இடம்பிடித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் மிகச்சிறந்த பங்காற்றிய சிறந்த வீரர்களுக்கு ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் விருதை வழங்கி கௌரவித்துவருகிறது.

அதன்படி, இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் வினூ மன்கட், இலங்கை முன்னாள் லெஜண்ட் கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்கரா, ஆண்டி ஃப்ளவர் உள்ளிட்ட 10 வீரர்களுக்கு ஹால் ஆஃப் ஃபேம் விருதை வழங்கி ஐசிசி கௌரவித்துள்ளது.​

முன்னதாக இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் இடம்பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதன்படி ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் இடம்பிடிக்கும் இரண்டாவது இலங்கை வீரர் என்ற பெருமையை குமார் சங்கக்கார பெற்றுள்ளார்.

pic : espncricinfo

Related Articles

Back to top button