ஐந்து மாதங்களாக தகரக்கொட்டில்களில் வாழும் மக்களின் நிலை மாறுமா?

கடந்த மே மாதம் 12ஆம் திகதி கேகாலை அட்டாலை பின்தெனிய தோட்ட பகுதியில் கடும் காற்றுடன் பெய்த கடும் மழையில் குடியிருப்பின் மீது பாரிய அரசமரம் விழுந்ததள்ளது.
இந்தநிலையில் குறித்த சம்பவத்தில் அந்த பகுதியில் உள்ள 11 வீடுகள் முற்றிலும் சேதமடைந்து இரண்டு சிறு குழந்தைகள் கடும் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
பாதிக்கப்பட்ட 11 குடும்பத்தை சேர்ந்த 48 நபர்கள் தற்காலிகமாக தோட்ட தமிழ் பாடசாலையில் தங்கவைகப்பட்டு,மீண்டும் 3 நாளைகளுக்கு பிறகு அவர்கள் தோட்ட நிர்வாகத்தின் மூலம் பாதிக்கப்பட்ட லயன் குடியிருப்புகளுக்கு பலவந்தமாக அனுப்பப்பட்டனர்.
செய்வதறியாது அப்பாவிமக்கள் உடைந்த லயன் குடியிருப்பின் தகரங்கலை கொண்டு கூடாரம் அமைத்து மிகவும் சிரமத்துடன் இன்று வரை வாழ்ந்து வருகின்றனர்.
சம்பவம் நடந்த அன்று அரசியல் வாதிகள் ,அரச அதிகாரிகள் வந்து சென்றாலும் அதன் பிறகு இதுவரை தம்மை பார்க்க யாரும் வருவதில்லை என தோட்ட மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
தற்போது மழைக்காலம் என்பதால் இருக்க இடமின்றி தவிக்கின்ற நிலையில் பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள் இருந்து படிக்க இடமில்லாமல் புத்தகங்களும் வைக்கிடமில்லாமல் மழை பெய்யும் நேரங்களில் தூங்க இடமில்லாமல் விடிய விடிய விழித்திருப்பதாக கவலை பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
கலிகமுவ பிரதேச செயலாளரிடம் தோட்ட மக்கள் இது தொடர்பாக வினவிய போது ,
தோட்டங்கள் அரசாங்கத்திற்கு சொந்தமில்லை எனவும், தோட்ட அதிகாரிகள் வீடுகள் கட்டுவதற்கு காணி மற்றும் வழங்குகின்றோம் வீடுகள் கட்டுவதற்கு யாரும் முன்வந்தால் குறிப்பிடுங்கள் என்று குறிப்பிடுவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்
இதேவேளை, மலையக அரசியல் வாதிகள் கண்டுக்கொள்ளாமல் இருப்பது தமக்கு பெரும் மனக்கஷ்டத்தை தருவதாக பாதிக்கபட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.