செய்திகள்

ஐந்து யானைகளை அனுமதியின்றி வைத்திருந்தமை தொடர்பான நீதிமன்ற விசாரணை எதிர்வரும் 12 ஆம் திகதி ஆரம்பம் ?

அலி ரொஷான் எனப்படும் நிரோஜ் ரொஷான் உள்ளிட்டஎட்டு பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கினை எதிர்வரும் 12 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு கொழும்பு விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

இன்றையதினம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பிரதிவாதிகளுக்கு எதிராக
திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகை கையளித்து பகிரங்க நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்டது.

ஐந்து யானைகளை அனுமதியின்றி வைத்திருந்தமை, அதற்கு உடந்தையாக இருந்தமை மற்றும் சூழ்ச்சி செய்தமை உள்ளிட்ட 28 குற்றச்சாட்டுக்கள் பிரதிவாதிகளுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளது.

நீதிபதிகளான களுஆராச்சி, தம்மிக்க கனேபொல மற்றும் ஆதித்ய பட்டபெதிகே ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னியிலையில் இன்றையதினம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளபட்டது.

Related Articles

Back to top button