செய்திகள்

ஐந்து லாம்பு சந்திப்பகுதியில் பயணப்பொதிக்குள் சடலமாக மீட்கப்பட்ட பெண் அடையாளங் காணப்பட்டார்..

கொழும்பு டாம் வீதி ஐந்து லாம்பு சந்திப்பகுதியில் பயணப்பொதிக்குள் மறைத்துவைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண் அடையாளங் காணப்பட்டுள்ளார்.

குருவிட்ட தெப்பனாவ பகுதியைச் சேர்ந்த 30 வயதான பெண்ணொருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இன்று பிரேத பரிசோதனைகள் இடம்பெறவுள்ளன.

சடலத்தின் தலைப்பகுதி இல்லாததால், மரபணு பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என பொலிஸார் குறிப்பிட்டனர்.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம், மார்க்க இலக்கம் 143 ஹங்வெல்ல – கொழும்பு பஸ்ஸில் சந்தேகநபரால் பயணப்பொதியில் வைத்து கெண்டு வரப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

குறித்த பஸ்ஸின் சாரதி மற்றும் நடத்துனர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன்

ஹங்வெல்ல பஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள தங்குமிடமொன்றிற்கு ஆணொருவரும் பெண்ணொருவரும் கடந்த 28 ஆம் திகதி இரவு வருகை தந்ததாகவும் கடந்த முதலாம் திகதி குறித்த ஆண் மாத்திரம் தங்குமிடத்தில் இருந்து வௌியேறியதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் அடையாளங் காணப்பட்டுள்ளார்.

விடுமுறையிலிருந்த புத்தல பொலிஸ் நிலையத்தின் உப​பொலிஸ் இன்ஸ்பெக்டரே அடையாளங் காணப்பட்டுள்ளதுடன் அவரைகைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித ரோஹன தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com