செய்திகள்

ஐ.எஸ் அமைப்பை அழிக்க சர்வதேசத்துடன் இணைந்து செயற்பட வேண்டும் – ரணில்

ஐ.எஸ் தீவிரவாத அமைப்பை அழிப்பதற்கு நாம் சர்வதேசத்துடன் இணைந்து செயற்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

நாம் அனைவரும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வருத்தம் அடைகின்றோம்.

அது தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவல் தொடர்பில் நாம் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை ஏற்றுக் கொள்கிறோம்.

அதன் காரணமாகதான் நாடாளுமன்ற தெரிவுக் குழுவொன்றை நியமித்து விடயங்களை வௌிப்படுத்தினோம்.

அன்று இந்த சம்பவம் இடம்பெற்ற தினம் அமெரிக்க ஜனாதிபதி என்னை தொடர்பு கொண்டு உதவி தேவையா என கேட்டார்.

நான் கூறினேன் உதவி தேவை, நாங்களும் உதவி செய்கிறோம் என்று கூறினேன்.

எங்களுக்கும் விருப்பம் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை அழிக்கும் நடவடிக்கையில் கலந்து கொண்டு போராட என்று கூறினேன்.

அன்று நான் அப்படி கூறினேன் என்று எனக்கு எதிராக கூட்டமைப்பு கூச்சலிட்டது.

ஏன் அமெரிக்காவுக்கு செல்கின்றீர்கள். ஏன் ட்ரம்பிடம் கேட்கின்றீர்கள் என்று.

ட்ரம்ம் இல்லை எந்த பிசாசாக இருந்தாலும் ஐ.எஸ் அமைப்பை அழிக்க அவர்களுடன் இணைந்து செயற்பட தயார் என்று நான் கூறினேன்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்க படை சென்று ஐ.எஸ் அமைப்பின் தலைவரை கொலை செய்துள்ளது.

இதுவரை இந்த சம்பவம் தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ நன்றியை தெரிவித்தாரா?

அது தொடர்பில் ஒரு வார்த்தை கூற முடியாது என்றால். எப்படி இந்நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் கதைக்க முடியும்.

ஐ.எஸ் அமைப்புக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும்.

ஐ.எஸ். தலைவர் இறந்தார் என்று அந்த அமைப்பு இதுவரை அழிக்கப்படவில்லை.

எனினும் அதனை நிறைவு செய்வது இலகுவானது.

அதனை செய்ய வேண்டும் என்றால் நாம் சர்வதேசத்துடன் இணைந்து செயற்பட வேண்டும் என்றார்.

Related Articles

Back to top button