சிறப்பு

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை அழிக்க வேண்டும் – பிரதமர் தெரிவிப்பு

மிகப்பெரிய அடிப்படைவாத சக்தியாக உருவெடுத்துள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை மேலும் வளர்வதற்கு இடமளிப்பது சிறந்தது அல்ல எனவும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை முற்றாக அழிக்க வேண்டும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

லக்கலையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பிரதமர் இதனை கூறியுள்ளார்.

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை முற்றாக அழிக்க வேண்டிய தேவை தற்போது அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது. 

எவ்வாறாயினும் முஸ்லிம் மக்கள் அனைவரும் தீவிரவாதிகள் அல்லர்.  முஸ்லிம் மக்களை அவ்வாறான  கண்ணோட்டத்தில் பார்க்கக் கூடாது எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button