உலகம்

ஐ.எஸ் தலைவரை கொல்லும் போது இருவர் சிக்கினர்.

ஐஎஸ் தலைவரைப் பிடிப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையின் போது, இருவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பென்டகன் தெரிவித்துள்ளது.

அத்துடன் ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பஹ்தாதியின் எஞ்சிய உடமைகள் யாவும் அகற்றி அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பஹ்தாதியின் மரணம் தொடர்பான ஆதாரங்களை தற்போது வௌியிடும் எண்ணம் இல்லையெனவும் பென்டகனின் உயரதிகாரி ஜெனரல் மார்க் மில்லி தெரிவித்துள்ளார்.

அமெரிக்க இராணுவத்தின் இராணுவ நடவடிக்கையின் போது பஹ்தாதி தற்கொலை அங்கியை வெடிக்க வைத்து தற்கொலை செய்து கொண்டதாக அமெரிக்கா அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button