உலகம்

ஐ.எஸ். தலைவர் கொல்லப்பட்ட விவகாரம் – அமெரிக்காவை சாடுகிறது ஈரான்

நீங்கள் உருவாக்கிய ஐ.எஸ். அமைப்பின் தலைவனை நீங்களே கொன்றுள்ளீர்கள் என அமெரிக்காவின் நடவடிக்கை குறித்து ஈரான் கருத்து தெரிவித்துள்ளது.

இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்.ஐ.எஸ்) நிறுவிய அபுபக்கர் அல்-பக்தாதி எனும் பயங்கரவாதியை அழிக்க அமெரிக்கா, ரஷ்யா, ஈராக், சிரியா உட்பட பல நாடுகள் தரைவழி மற்றும் வான்வழி தாக்குதல்களை நடத்தியிருந்தன.

இந்நிலையில், பல வருடங்களின் பிறகு நேற்று சிரியாவின் இட்லிப் பகுதியில் அமெரிக்காவின் அதிரடிப்படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் ஐ.எஸ். அமைப்பின் தலைவன் கொல்லப்பட்டுவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.

அமெரிக்காவின் அறிவிப்பு குறித்து கருத்துத் தெரிவித்துள்ள ஈரானின் தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் முகமது ஜாவத் அசாரி, ஐ.எஸ். அமைப்பின் தலைவன் அபுபக்கர் அல்-பக்தாதி கொல்லப்பட்டது ஒன்றும் மிகப்பெரிய விஷயம்  இல்லை.

நீங்கள் உருவாக்கியதை நீங்களே கொன்றிருக்கிறீர்கள் என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதேவேளை, ஈரான் அரசின் செய்திதொடர்பாளர் அலி ரபிய் தனது ருவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட செய்தியில்,  பக்தாதி கொல்லப்பட்டு விட்டாலும் ஐ .எஸ். பயங்கரவாத அமைப்புக்கான பாதை இன்னும் அழிக்கப்படவில்லை.

அல்கொய்தா அமைப்பின் தலைவன் ஒசாமா  பின்லேடன் கொல்லப்பட்ட பிறகும் அந்த பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது.

அதே போல் தான் ஐ.எஸ். அமைப்பும்.

வெடி குண்டுகளாலும், ஆயுதங்களாலும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பை ஒழிக்கமுடியாது.

அந்த அமைப்பு இன்னும் வளர்ந்துகொண்டுதான் இருக்கிறது எனத் தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button