செய்திகள்

ஐ.தே.க.வில் இருந்து விலகினார் அர்ஜுன ரணதுங்க

முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார். கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம், கட்சியில் இருந்து விலகுவதாக அவர், தனது தீர்மானத்தை தெரிவித்துள்ளார்.

கட்சியில் உண்மையான மாற்றம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்படாதமையினால் கட்சியை விட்டு விலக தீர்மானித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்ததன் விளைவாக அவருக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவி கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button