உலகம்

ஐ.நா நீதிமன்றத்தில் காம்பியா வழக்கு.

ரோஹின்யா முஸ்லிம்களுக்கு எதிராக மியன்மார் இனவழிப்பினை மேற்கொண்டதாகக் குற்றஞ்சுமத்தி ஐக்கிய நாடுகள் நீதிமன்றத்தில் காம்பியா வழக்குத் தாக்கல் செய்துள்ளது.

மேற்கு ஆபிரிக்காவின் சிறிய நாடாகிய காம்பியாவினால் நாடுகளுக்கிடையேயான பிரச்சினைகளுக்குத் தீர்வினை வழங்கும் சர்வதேச நீதியியல் நீதிமன்றத்தில் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மியன்மாரில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பான அறிக்கையொன்றினை கடந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை வௌியிட்டிருந்தது.

இனவழிப்பினை மேற்கொண்டமைக்காக அந்நாட்டு இராணுவ அதிகாரிகள் விசாரணைகளுக்கு முகங்கொடுக்க வேண்டுமென குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் இவ்வாறான குற்றங்களை தமது துருப்பினர் மேற்கொள்ளவில்லையென மியன்மார் அரசாங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button