உலகம்செய்திகள்

ஐ.நா. பொதுச்செயலாளராக மீண்டும் தெரிவானார் அன்டனியோ-குட்டரெஸ்

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளராக அன்டனியோ-குட்டரெஸ் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் அன்டனியோ-குட்டரெஸ் ஐ.நா.சபை பொதுச் செயலாளராக மீண்டும் தெரிவு செய்யப்பட்டார். அவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் 2026ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர்த்துக்கல் நாட்டின் முன்னாள் பிரதமரான அன்டனியோ குட்டரெஸ், ஐக்கிய நாடுகள் சபையின் 9ஆவது பொதுச்செயலாளராக கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி முதல் பதவி வகித்து வருகிறார். இவரது பதவிக்காலம் இந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதியுடன் நிறைவடையும் நிலையில், ஐ.நா.வின் அடுத்த பொதுச்செயலாளரை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்றன.

சமீபத்தில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை கூட்டத்தில் அன்டனியோ குட்டரெசையே மீண்டும் பொதுச் செயலாளராக நியமிக்க ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையிலேயே ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளராக அன்டனியோ-குட்டரெஸ் மீண்டும் நேற்று தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

Related Articles

Back to top button