...
விளையாட்டு

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் புதிய சாதனை நிகழ்த்திய ரோகித் சர்மா.

ஐ.பி.எல்.லில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா, அணி ஒன்றுக்கு எதிராக ஆயிரம் ஓட்டங்கள் எடுத்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

ஐ.பி.எல். போட்டியின் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையில் நேற்று முன்தினம் 23ஆம் திகதி இடம்பெற்ற போட்டியிலே இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது.

இதில், மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவர் ரோகித் சர்மா, ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக ஆயிரம் ஓட்டங்கள் எடுத்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அவர் 3வது ஓவரில் வருண் சக்ரவர்த்தி வீசிய பந்தில் இந்த சாதனையை ஏற்படுத்தியுள்ளார்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen