உலகம்

ஒசாமாவின் மகன் உயிரிழந்தார் – உறுதிப்படுத்தியது அமெரிக்கா.

அல் கைதா அமைப்பின் தலைவரும் ஸ்தாபகருமான ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்ஸா பின்லேடன் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது.

எனினும் ஹம்ஸா பின்லேடனின் மரணம் தொடர்பிலான விரிவான தகவல்கள்  அமெரிக்கா வெளியிடவில்லை.  

30 வயதான ஹம்ஸா பின்லேடன்தொடர்பில் தகவல்கள் வழங்குவோருக்கு 1 மில்லியன் டொலர் சன்மானமாக வழங்கப்படும் என, அமெரிக்க அரசாங்கத்தால் கடந்த பெப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அமெரிக்கா மற்றும் ஏனைய நாடுகளின் மீது தாக்குதல் நடத்தவுள்ளதாக, ஹம்ஸா பின்லேடன் குரல் பதிவுகளையும் காணொளிகளையும் கடந்த காலங்களில் வெளியிட்டிருந்தார்.

2001ஆம் ஆண்டு அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதலின்போது ஆப்கானிஸ்தானில் அவர் தங்கியிருந்ததாகவும் பின்னர் அமெரிக்கா தலைமையிலான தேடுதலின்போது பாகிஸ்தானில் பதுங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அவரது தந்தையான ஒசாமா பின்லேடன் 2011ஆம் ஆண்டு அமெரிக்கப் படையினரால் பாகிஸ்தானில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button