உலகம்செய்திகள்

ஒடிசாவில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக பொது முடக்கம்

இந்தியாவின் ஒடிசாவில் எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை முடக்கம் அமுல்படுத்தப்படவுள்ளது.

ஒடிசாவில் இதுவரை 4.5 லட்சம் பேர் கொரொனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன் , நேற்று பத்தாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் கொரோனாத் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கொரொனா தொற்று நிலைமை தொடர்பில் அம்மாநில முதலமைச்சர் தலைமையில் நேற்று விசேட கூட்டம் நடைபெற்றது.

தொற்றுக்குள்ளாபவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவற்றை சமாளிக்க மக்கள் எச்சரிக்​கையுடன் செயற்பட வேண்டும் எனவும் முதலமைச்சர் நவீன் பட்னாயக் தெரிவித்துள்ளார்.

இதனால் மக்கள் ஒன்றுகூடுவதைத் தவிர்க்கும் பொருட்டு முடக்கம் அமுல்படுத்தப்படுவதாவும் அவர் தெரிவித்துள்ளார்.​

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com