செய்திகள்

ஒன்றரை கிலோ தங்கம் கடத்தியவர் கைது.

ஒன்றரை கிலோ கிராமுக்கும் அதிக நிறையுடை தங்கத்தை சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கட்டுநாயக்க விமானநிலையத்தில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

டுபாயிலிருந்து நாட்டுக்கு வருகைதந்த நீர்கொழும்பைச் சேர்ந்த 33 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து 1 கிலோ 700 கிராம் நிறையுடைய 17 தங்க பிஸ்கட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
image download