செய்திகள்

ஒன்லைன் ஊடாக மதுபான விற்பனை : சட்ட ரீதியான அனுமதிக்கு ஆராய்வு

இணையத்தளத்தின் ஊடாக (ஒன்லைன்) மதுபான விற்பனைக்கு சட்டபூர்வமாக அனுமதி வழங்குவது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக கலால் திணைக்கள ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார். ஒன்லைன் மூலமாக மதுபானம் விற்பனை செய்வதற்கு சட்டரீதியான அனுமதி கோரி பல நிறுவனங்கள் கலால் திணைக்களத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளன.

இந்நிலையிலேயே அது தொடர்பில் அனுமதியைப் பெற்றுக் கொள்வதற்காக நிதியமைச்சின் அனுமதியைக் கோரி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமான மதுபானம் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலைமையை ஓரளவு கட்டுப்படுத்தும் வகையிலேயே ஒன்லைன் மூலமாக மதுபான விற்பனைக்கு அனுமதி வழங்குவது தொடர்பில் உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும், எவ்வாறாயினும் இதுவரை நிதியமைச்சின் பதில் தமக்கு கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து வகையான மதுவிற்பனை நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.

அதேவேளை, சட்டவிரோதமான முறையில் இடம்பெறும் மது விற்பனையை தடுக்கும் வகையில் மதுபானசாலைகளுக்கு முத்திரையிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button