செய்திகள்விளையாட்டு

ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிரான கிரிக்கெட் சுற்றுத் தொடர்களில் விளையாடுவதற்கான வீரர்கள் ஒப்பந்தத்தில், இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் 24 பேர் வரையில் கையொப்பமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

குறித்த ஒப்பந்தம் தொடர்பில் சிக்கல்கள் பல நிலவி வந்ததுடன், கிரிக்கெட் வீரர்கள் தரப்படுத்தலின்போது, பின்பற்றப்பட்ட நடைமுறை வெளிப்படைத்தன்மை இல்லாத காரணத்தினால் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட மறுப்பு தெரிவித்திருந்தனர். ​

எனினும் இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் அனைவரும் தற்போது இந்திய கிரிக்கெட் அணியுடனான கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிரான கிரிக்கெட் சுற்றுத்தொடருக்கான 20 பேர் அடங்கிய இலங்கை குழாம் நாளை (08) அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related Articles

Back to top button