...
செய்திகள்

ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட பிரதேசங்கள்

நாட்டின் மூன்று மாவட்டங்களில் ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் கொவிட் தொற்றாளர்களை வீடுகளில் பராமரிக்கும் பிரிவின் பிரதானியான விசேட வைத்திய நிபுணர் டொக்டர் மல்காந்தி கல்ஹேன தெரிவித்துள்ளார்.

இதன்படி, கொழும்பு, கம்பஹா மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களிலிருந்து ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இலங்கையில் இதுவரை ஒமிக்ரோன் தொற்றுக்குள்ளான 48 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், கடந்த இரு வாரங்களில் ஒமிக்ரோன் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருவதாகவும் அவர் கூறுகின்றார்.

ஒமிக்ரோன் தொற்றினால் ஏற்படும் ஆபத்து தொடர்பில் அறிந்து, சுகாதார அமைச்சினால் வெளியிடப்படும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி செயற்படுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஒமிக்ரோன் தொற்றினால் முழு நாட்டையும் அபாயத்திற்கு உட்படுத்தும் வகையில் செயற்படுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு விசேட வைத்திய நிபுணர் டொக்டர் மல்காந்தி கல்ஹேன கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen