அரசியல்செய்திகள்

ஒரு குடும்பம் செழிப்புடன் வாழ நாட்டை சுடுகாடாக மாற்றியிருக்கிறார்கள் – வடிவேல் சுரேஷ்

ஒரு குடும்பம் செல்வ செழிப்புடன் வாழ நம் நாட்டை சுடுகாடாக மாற்றியிருக்கிறார்கள் என நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ் விசனம் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்ட நிகழ்வில் கலந்துகொண்டிருந்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்

மேலும்

இன்று அமெரிக்க பிரஜை ஜனாதிபதி தேசியப்பட்டியலில் வந்தவர் பிரதம மந்திரி இருவருமே நாட்டு மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் இன்னமும் பொய்யான உறுதிமொழிகளை நாட்டு மக்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இன்று போய் நாளை வா என்ற கதையை பெட்ரோல்-டீசல் கதை இந்தியாவில் இருந்து வழங்கப்பட்ட நிவாரண பொருட்கள் முறையாக மக்களுக்கு சென்றடையவில்லை பெருந்தோட்ட மலையக மக்கள் நிவாரண பொருட்களை பெற்றுக் கொள்வதற்கு இன்னோரன்ன பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

மலையக பெருந்தோட்ட பகுதிகளில் ஏக்கர் கணக்கிலான காணிகள் காடுகளாக மாற்றப்பட்டுள்ளது அவற்றை முறையாக பகிர்ந்தளித்திருந்தால் நாட்டில் பஞ்சம் என்ற சொல்லுக்கே இடம் இருந்திருக்காது நீர் வளம் நில வளம் மழை வளம் மலை வளம் அனைத்து வளங்களையும் கொண்ட நாடு இன்று பட்டினியினாளும் பஞ்சத்தினாலும் அல்லோல பட்டுக் கொண்டிருக்கின்றது.

இந்நாட்டில் வாழ்வதா சாவதா என்ற நிலையில் நாட்டினுடைய மக்கள் பொறுப்பில்லாத அரசாங்கத்தின் மிலேச்சத்தனமான செயற்பாடுகளினால் நாட்டு மக்களே பாதிக்கப்பட்டுள்ளார்கள் என தெரிவித்தார்.

ராமு தனராஜா

Related Articles

Back to top button