சமூகம்

ஒரு மாதத்தில் பதிவேற்றப்பட்ட வீடியோக்கள்

இலங்கையில் சிறுவர்கள் தொடர்பில் 17 ஆயிரத்து 629 வீடியோக்கள் கடந்த ஒரு மாதத்தில் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இவ்வாறு சிறுவர்களின் பாலியல் ரீதியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தளத்திற்கு பதிவேற்றம் செய்வோர் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பிலான விசாரணைகளுக்கு அமைய சந்தே நபர்களை கைது செய்யும் நடவடிக்கையை இன்று (29) முதல் ஆரம்பிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஜுன் 17ஆம் திகதி முதல் ஜுலை 27ஆம் திகதி வரையான காலப் பகுதியில் மாத்திரம் சிறுவர்கள் தொடர்பிலான குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளமை  இனங்காணப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். 

இவ்வாறான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவேற்றப்படும் இடம்,  பதிவேற்ற பயன்படுத்தும் கணினி, மடிக்கணினி, அலைபேசி உள்ளிட்ட சாதனங்களை கண்டிபிடிப்பதற்கான புதிய தொழில்நுட்பம் பொலிஸாரிடம் உள்ளதாகவும் அவர் கூறினார்.

Related Articles

Back to top button
image download