செய்திகள்

ஒரு மில்லியன் சைனோபார்ம் தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்தன.!

சீனாவில் உற்பத்தி செய்யப்படும் ஒரு மில்லியன் சைனோபார்ம் தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்துள்ளன. இன்று காலை 4.30 மணியளவில் ஸ்ரீலங்கன் விமான சேவையின் ஊடாக குறித்த தடுப்பூசிகள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இதையடுத்து, குறித்த தடுப்பூசிகள், அரச ஒளடதங்கள் கட்டுப்பாட்டு நிறுவகத்திடம் கையளிக்கப்பட்டு, பின்னர், அரச மத்திய ஒளடத களஞ்சியத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளன. மேலும் இரண்டு மில்லியன் சைனோபார்ம்தடுப்பூசிகள் ஜூலை மாதத்திற்கு பின்னர் இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ளன.

அத்துடன், ஃபைசர் தடுப்பூசிகளின் முதல் தொகுதி எதிர்வரும் திங்கட்கிழமை நாட்டை வந்தடைய உள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button