செய்திகள்

ஒரு மில்லியன் மொடர்னா நாளைய தினம் இலங்கைக்கு..!

உலக சுகாதார ஸ்தாபனத்தின் கோவக்ஸ் திட்டத்தின் மூலம் இலங்கைக்கு, அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட 10 இலட்சம் டோஸ் மொடர்னா தடுப்பூசிகள் நாளைய தினம் இலங்கைக்கு கிடைக்கும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்த தடுப்பூசிகளை கண்டி மாவட்ட மக்களுக்கு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஔடத உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

குறித்த தடுப்பூசியை தவிர இலங்கைக்கு நேரடி நன்கொடையாக அமெரிக்காவிலிருந்து மற்றொரு தொகுதி தடுப்பூசிகள் கிடைக்கும் என்றும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன குறிப்பிட்டுள்ளார்.

அவசரகால பயன்பாட்டிற்காக உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அங்கீகாரம் வழங்கப்பட்ட மொடர்னா தடுப்பூசியை, இலங்கை 4 ஆவது தடுப்பூசியாக பயன்படுத்தவுள்ளது.

Related Articles

Back to top button