செய்திகள்பதுளைமலையகம்

ஒரு வேளை உணவுக்காக போராடும் 3 உயிர்கள்..

ஊவா மாகாணத்தில் பதுளை மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய ‘ஹிங்குருமுள்ள’ பிரதேசத்தில் வாழும் இவர்கள் ஒரு வேளை உணவுக்காக மிகவும் சிரமப்படுகின்றனர்.

பதுளை பாரதி மகா வித்தியாலயத்தில் தரம் 8 ல் கல்வி கற்கும் ஜெயபாலன் உணவின்றி பாடசாலைக்கு சமூகம் தருவதாக அறியப்பெற்ற தகவலையடுத்து, வகுப்பாசிரியர் அம்மாணவனின் வீட்டிற்கு நேரில் சென்றுள்ளார்.

அங்கு சென்ற வேளையிலே தான், மேலும் இரு உயிர்கள் உணவுக்காக பரிதவிக்கும் நிலைமையை கண்டறிந்துள்ளார்.

தாய் தந்தையின்றி தாத்தா, பாட்டியின் பராமரிப்பிலேயே இம்மாணவன் வாழ்ந்து வருகின்றான்.

எனவே இம்மாணவனின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும், அந்த மாணவனின் தாத்தா பாட்டியின் வறுமையை கருத்தில் கொண்டும், கருணை உள்ளம் கொண்டவர்கள் உதவ முன்வருமாறு ஊவா தமிழ் அறவாரியத்தால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலதிக தகவல்களுக்கு அழைக்கவும்
ஊவா தமிழ் அறவாரியம்
0773534225

Related Articles

Back to top button
image download