மலையகம்
ஒரே இரவில் இரண்டு கோவில்கள் உட்பட வியாபார நிலையமும் கொள்ளை -மன்றாசி பகுதியில் திகிழ் சம்பவம்
அக்கரப்பத்தனை பொலீஸ் பிரிவுட்குட்பட்ட மன்றாசி பகுதியில் அம்மன் கோவிலை உடைத்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கிப்படுகின்ற அதே நேரம், அங்கு இருந்து சில கிலோமீட்டர் தூரததிலுள்ள சின்ன நாகவத்தை தோட்ட கோவிலிலும் அம்மன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் நேற்று இரவு 01 மணியளவில் இடம் பெற்றுக்கலாம் என பொது மக்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
அதே நேரம் மன்றாசி பகுதியில் வைத்தியசாலைக்கு செல்லும் பாதையில் கடையொன்றை உடைத்து அங்கிருந்து பணம் மற்றும் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது .
இந்த கொள்ளை சம்பவத்துக்கு பயன்படுத்திய ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளதுடன், இம்மூன்று கொள்ளை சம்பவம் தொடர்பான விசாரணைகளை அக்கரப்பத்தனை பொலீஸார் முன்னெடுத்து வருகின்றனர்.