செய்திகள்

ஒரே நாளில் 10 உயிர்களை பலி கொண்ட வாகன விபத்துக்கள்

வாகன விபத்துக்களில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையில் மீண்டும் சடுதியாக அதிகரித்துள்ளதுடன் நேற்றைய தினத்தில் (13) மாத்திரம் 10 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாதிபர் தெரிவித்தார். அவர்களில் 07 பேர் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் என்றும் உயிரிழந்த ஏனைய மூவரும் பாதசாரிகள் என அவர் கூறினார்.

இலங்கையின் வீதிகளின் கட்டமைப்புடன் ஒப்பிடுகையில் அதிகரித்துள்ள வாகன விபத்துக்கள் மோசமான நிலைமையையே வெளிப்படுத்துகிறது.

வாகன விபத்துகளினால் 2020 ஆம் ஆண்டு 2,144 பேரும், 2019 ஆம் ஆண்டு 2,139 பேரும் உயிரிழந்துள்ளதாக தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், இந்த வருடம் இதுவரையான காலப் பகுதியில் மாத்திரம் 1,266 பேர் உயிரிழந்துள்ளதுடன் 7,000க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் கூறினார்.

இந்த எண்ணிக்கை இலங்கையை பொறுத்த வரையில் அதிகமாகும். எனவே சாரதிகள் எச்சரிக்கையாக வாகனங்களை செலுத்த வேண்டும் என்பதுடன் பொது மக்களும் அவதானத்துடன் இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

Related Articles

Back to top button