செய்திகள்

ஒரே நாளில் 9 உயிர்களை பலி கொண்ட வாகன விபத்துக்கள்

நாடு முழுவதும் பதிவான வீதி விபத்துக்களினால் கடந்த 24 மணித்தியாலங்களில் (14) மாத்திரம் 09 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாதிபர் தெரிவித்தார். 

அவர்களில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 7 பேர் இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன், ஏனைய இருவரும் முச்சக்கரவண்டிகளில் பயணித்தவர்கள் என அவர் கூறினார்.

எனவே சாரதிகள் எச்சரிக்கையாக வாகனங்களை செலுத்த வேண்டும் என்பதுடன் பொது மக்களும் அவதானத்துடன் இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

வாகன விபத்துகளினால் 2020 ஆம் ஆண்டு 2,144 பேரும், 2019 ஆம் ஆண்டு 2,139 பேரும் உயிரிழந்துள்ளதோடு, இந்த வருடம் இதுவரையான காலப் பகுதியில் மாத்திரம் 1,266 பேர் உயிரிழந்துள்ளதுடன் 7,000க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வைப்பகப் படம்

Related Articles

Back to top button