சினிமா
ஒரே நேரத்தில் பிரான்ஸில் சுற்றும் ‘குயின்’ நடிகைகள்!
2014-ம் ஆண்டு இந்தியில் கங்கனா ரனாவத் நடித்து வெளிவந்து சூப்பர் ஹிட்டாக ஓடிய படம் ‘குயின்’. இப்படம் தற்போது தென்னிந்திய மொழிகளில் ஒரே நேரத்தில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.
கங்கனா ரனாவத் நடித்த கதாபாத்திரத்தில் தமிழில் காஜல் அகர்வாலும், தெலுங்கில் தமன்னாவும், கன்னடத்தில் பருல் யாதவ்வும், மலையாளத்தில் மஞ்சிமா மோகனும் நடிக்கிறார்கள்.
இந்தப் படத்தின் வெளிநாட்டுப் படப்பிடிப்பு தற்போது பிரான்ஸ் நாட்டில் தொடங்கியுள்ளது.
இதற்காக நான்கு மொழி நடிகைகளும் ஒரே சமயத்தில் பிரான்ஸ் நாட்டிற்குச் சென்றுள்ளனர்.
அங்கு நான்கு பேரும் நடிக்கும் நான்கு மொழிப் படங்களும் தனித் தனியாகப் படம் பிடிக்கப்படுகிறது.
தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் ‘குயின்’ ரீமேக்கை ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார்.
நான்கு மொழிகளில் படமாகும் இப்படத்தை ஒரே சமயத்தில் வெளியிட உள்ளார்கள்.