செய்திகள்

ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு குழந்தைகளுக்கு ஜனாதிபதி நிதியுதவி.

விமானப்படை உத்தியோகத்தரான அயேஷா தில்ஹானி தனது முதலாவது பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பெற்றெடுத்தார். இரண்டு பெண் மற்றும் இரண்டு ஆண் குழந்தைகளினதும் பாதுகாப்பு, போசணை மற்றும் சுகாதார தேவைகளை பூர்த்திசெய்வது இந்த இழந்தாய்க்கு சவாலாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

பெற்றோர்களின் உதவியுடன் குழந்தைகளை பராமரித்தாலும் அரச உத்தியோகத்தர்களாகிய இந்த தாய், தந்தையர்களுக்கு குழந்தைகளை பராமரிப்பதற்கான செலவினை சமாளிக்க முடியாது.

எனவே “ஜனாதிபதியிடன் சொல்லுங்கள்” நிகழ்ச்சித்திட்டத்திற்கு அழைப்பினை மேற்கொண்டு ஜனாதிபதி அவர்களிடம் உதவி கோருவதற்கு அயேஷா அதனாலேயே முடிவு செய்தார்.

“ஜனாதிபதியிடம் சொல்லுங்கள்” நிகழ்ச்சித்திட்டத்திற்கு கிடைக்கப்பெற்ற இந்த அழைப்பு தொடர்பில் கவனம் செலுத்திய ஜனாதிபதி அவர்கள், குழந்தைகளின் பராமரிப்பிற்காக தலா ஐந்து இலட்ச ரூபா வீதம் நான்கு குழந்தைகளுக்கும் 20 இலட்ச ரூபா நிதியுதவியினை வழங்கினார்.

இந்நிதியுதவியினை பெற்றுக்கொள்வதற்காக இன்று (09) முற்பகல் ஜனாதிபதி செயலகத்திற்கு வருகைதந்த திருமதி. தில்ஹானி, அவரது கணவர், தாயார் உள்ளிட்ட நான் குழந்தைகளுடனும் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களை சந்தித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button