செய்திகள்விளையாட்டு

ஒலிம்பிக்கை ஒத்தி வையுங்கள் : ஜப்பான் மக்கள் டோக்கியோவில் ஆர்ப்பாட்டம்

2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை ஓத்திவைக்குமாறு கோரி டோக்கியோ நகரில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக டோக்கியோ நகரில் அவசர நிலையும் ஜப்பான் அதிகாரிகளினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ​

பார்வையாளர்கள் இன்றி இம்முறை ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கு சர்வதேச ஒலிம்பிக் குழு நேற்று தீர்மானித்தது. ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குவதற்கு இன்னும் 3 வாரங்களுக்கு குறைவான காலமே உள்ள நிலையில், வைரஸ் பாதிப்புகள் அதிகரிப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.​

இந்நிலையில், இவ்விடயங்களை கருத்திற்கொண்டு டோக்கியோ ஒலிம்பிக் விழாவை ஒத்திவைக்குமாறு ஆர்ப்பாட்டக்கார்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

4 மாத ஓட்டத்தை தொடர்ந்து ஒலிம்பிக் ஜோதி இன்று டோக்கியோ நகரை வந்தடைந்ததாக வெளிநாட்டு அசெய்திகள் தெரிவிக்கின்றன.

கொரோனா அச்சுறுத்தல் நிலையை கருத்திற்கொண்டு கடந்த வருடமும் ஒலிம்பிக் போட்டி ஒத்திவைக்கப்பட்டதுடன் இவ்வருடம் எவ்வாறெனினும் அதனை நடத்துவதே தமது நோக்கம் என சர்வதேச ஒலிம்பிக் போட்டி ஏற்பாட்டு குழுவினர் வலியுறுத்தியுள்ளனர்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் ஜூலை 23 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 8 ஆம் திகதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளதுடன், ஒரு மாதத்தின் பின்னர், ஓகஸ்ட் 24 ஆம் திகதி பராலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாகவுள்ளன.

Related Articles

Back to top button