செய்திகள்விளையாட்டு

ஒலிம்பிக் அணியின் உறுப்பினர் ஒருவருக்கு கொவிட்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஆண்டு நடக்கவிருந்த ஒலிம்பிக் போட்டி கொரோனா பரவலால் இந்த ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டது. அதன்படி, வருகிற ஜூலை 23 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 8 ஆம் திகதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன.

உலகில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கெடுப்பதற்காக ஜப்பானுக்கு சென்றிருந்த உகாண்ட ஒலிம்பிக் அணியின் உறுப்பினர் ஒருவர் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.

ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாவதற்கு இன்னும் 5 வாரங்கள் உள்ளநிலையில் போட்டிகளில் பங்கெடுக்கும் வீரர்கள் மற்றும் உறுப்பினர்களில் கண்டறியப்பட்ட முதல் கொவிட் தொற்று அடையாளம் இதுவாகும். உகாண்டாவிலிருந்து டோக்கியோவின் நருடோ நிலையத்தில் இன்றைய தினம் தரையிறங்கிய 9 பேர் கொண்ட குத்துச் சண்டை வீரர்கள் கொண்ட குழு உறுப்பினர் ஒருவருக்கே இவ்வாறு கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button