உலகம்விளையாட்டு

ஒலிம்பிக் உள்ளிட்ட சர்வதேச போட்டிகளில் பங்கேற்பதற்க்கு ரஷ்யாவுக்கு தடை ?

ஒலிம்பிக் உள்ளிட்ட சர்வதேச போட்டிகளில் பங்கேற்பதற்கான தடை ரஷ்யாவுக்கு, மேலும் நான்கு வருடங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச ஊக்கமருந்து எதிர்ப்பு நிலையமான வாடா நிறுவனத்தின் பொதுக்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

2020 ஒலிம்பிக் விழா மற்றும் 2022 ஆம் ஆண்டு உலகக்கிண்ண கால்பந்தாட்டத்தொடர்களில் ரஷ்ய வீரர்களால் தமது தேசியக்கொடியின் கீழ் போட்டியிடும் வாய்ப்பு அற்றுப்போயுள்ளது.

எவ்வாறாயினும் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தாக ரஷ்ய மெய்வல்லுநர் வீரர்கள் சுயாதீனமாக சர்வதேச மெய்வல்லுநர் போட்டிகளில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய மெய்வல்லுநர் வீர வீராங்கனைகள் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தியமை கடந்த 2015 ஆம் ஆண்டு உறுதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button