செய்திகள்விளையாட்டு

ஒலிம்பிக் போட்டிகளைப் பார்வையிட ஜப்பானிய இரசிகர்களுக்கு அனுமதி

2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளைப் பார்வையிட 10 ஆயிரம் ஜப்பானிய இரசிகர்களுக்கு அனுமதியளிக்கப்படவுள்ளது. வௌிநாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்தப்போட்டிகளைப் பார்வையிட ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. 10 ஆயிரம் பார்வையாளர்களுக்கான வசதிகள் மாத்திரமே ஏற்படுத்தப்படவுள்ளது.

பார்வையாளர் அரங்கின் உண்மையான கொள்ளளவின் 50 வீதத்தை விட அதிகரிக்காத வகையில், பார்வையாளர்களுக்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஜூலை மாதம் 23 ஆம் திகதி ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாகவுள்ளதுடன், ஒரு மாதத்தின் பின்னர், ஓகஸ்ட் 24 ஆம் திகதி பராலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாகவுள்ளன . பராலிம்பிக் போட்டிகளைப் பார்வையிடக்கூடிய இரசிகர்களின் எண்ணிக்கை ஜூலை 16 ஆம் திகதியளவில் உறுதிப்படுத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button