செய்திகள்விளையாட்டு

ஒலிம்பிக் விழாவில் கலந்துகொள்ளும் இலங்கை குழுவிற்கு சொகுசு வசதி

ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்கின்ற இலங்கை ஒலிம்பிக் குழுவிற்கு சொகுசு வசதிகளுடன் தங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுமென அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஒலிம்பிக் அணியை ஊக்குவிக்கும் தேசிய பொறுப்பாக கருதியே இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

2020 டோக்யோ ஒலிம்பிக் போட்டி ஏற்பாட்டாளர்கள் பரிந்துரை செய்துள்ள சகல விதிமுறைகளுக்கு அமைய இலங்கை அணி கலந்துகொள்ளவுள்ளது. இம்மாதம் 23 ம் திகதி ஆரம்பமாகவுள்ள ஒலிம்பிக் போட்டித் தொடரில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி மெய்வல்லுனர் போட்டிகள், பெட்மிண்டன், ஜிம்நாஸ்டிக், ஜுடோ, குறிபார்த்து சுடுதல், நீச்சல் ஆகிய போட்டிகளில் வீரர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

4 வீரர்களும் 5 வீராங்கனைகளும் பயிற்சியாளர் ஒருவர் உட்பட 17 பேர் ஒலிம்பிக் விழாவில் கலந்துகொள்கின்றனர். சர்வதேச போட்டிகளில் கலந்துகொள்கின்ற எமது வீரர்களின் நம்பிக்கையையும் ஆளுமையையும் மேம்படுத்த அரசாங்கம் எப்போதும் செயற்படுமென அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

Back to top button