செய்திகள்
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்கப்படும்!

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தகுதியான சுகாதாரப் பணியாளர்களுக்கு பிரத்தியேகமாக எரிபொருள் கொடுப்பனவு ஒதுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்தே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இது அத்தியாவசிய சேவை பணியாளர்கள் தங்கள் கடமைகளை நிறைவேற்ற பெரிதும் உதவும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.