சினிமாசெய்திகள்

“ஒவ்வோரு வருஷமும் பிறந்தநாள் வருது ஆனா வயசாகாம இருக்காரே..!” டிவிட்டரை தெறிக்கவிடும் விஜய் ரசிகாஸ்

நடிகர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் டிவிட்டரில் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். நடிகர் விஜய் இன்று தனது 47வது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றார்.

இதனை முன்னிட்டு அவரது ரசிகர்கள் மட்டுமல்லாது திரையுலக பிரபலங்களும் டிவிட்டரில் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றார்கள். கடந்த 3 நாட்களாக பல்வேறு ஹேஷ்டேக்குகளை கிரியேட் செய்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் அவரது ரசிகர்கள்.

இந்நிலையில் இன்று #HBDTHALAPATHYVijay, #HappyBirthdayThalapathy #Beast #HBDBelovedVijay என ஹேஷ்டேக்குகளை உருவாக்கி டிவிட்டரை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ‘ஒவ்வோரு வருஷமும் பிறந்தநாள் வருது ஆனா வயசாகாம இருக்காரே..!’ என தளபதியை வித்தியாசமாக வாழ்த்தியுள்ளார் பிக்பாஸ் நடிகை கஸ்தூரி

Related Articles

Back to top button