செய்திகள்

ஓகஸ்ட் மாத தவணை விடுமுறையில் மாற்றம்.

2ஆம் தவணைக்காக பாடசாலைகள் தாமதமாக ஆரம்பிக்கப்பட உள்ளமையினால், தாமதமடைந்துள்ள கற்றல் நடவடிக்கைகளுக்காக, ஓகஸ்ட் மாத இரண்டாம் தவணை விடுமுறை காலத்தைக் குறைக்கும் நிலை ஏற்படலாம். பாதுகாப்பு தரப்புடன் கலந்துரையாடியதன் பின்னரே திங்கட்கிழமை (6) இரண்டாம் தவணைக்கு பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. கடந்த இரண்டு வாரங்களாக பாடசாலை மாணவர்களுக்கு மேலதிக விடுமுறை கிடைத்துள்ளது. இந்த நிலையில், கல்விப் பொதுத்தராதார உயர்தர மற்றும் சாதாரணத் தரப்பரீட்சைகளுக்கு மாணவர்கள் தயாராக வேண்டும். எனவே எதிர்வரும் காலத்தில் விடுமுறைகளை குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். அதற்காக ஓகஸ்ட் மாதம் வழங்கப்படும் விடுமுறையை இரத்து செய்யும் நிலையும் ஏற்படலாம். அல்லது சனிக்கிழமைகளில் பாடசாலை நடத்தப்படலாம். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் இந்த விடயங்களைத் தெரிவித்துள்ளார். இரண்டாம் தவணை கற்றல் நடவடிக்கைள் கடந்த மாதம் 22 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட இருந்த நிலையில், கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதலை அடுத்து, இரண்டாம் தவணை பாடசாலை ஆரம்பம் எதிர்வரும் 6 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com