...
உலகம்

ஓமனில் ஷாஹீன் புயல் – மூவர் உயிரிழப்பு

ஷாஹீன் (Shaheen) புயல் நேற்று இரவு ஓமனில் கரையை கடந்தது.இதனால் பலத்த மழையால் மஸ்கன் உள்ளிட்ட ஓமன் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

ஓமன்தலைநகர் மஸ்கட்டில் இருந்து 65 கிலோ மீட்டர் தொலைவில் கடல் பகுதியில் ஷாஹீன் புயல் நேற்று காலை நிலைகொண்டிருந்தது.புயல் கரையை கடந்த போது பலத்த மழை காரணமாக நகரின் பல பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியது.

பலத்த மழை பெய்ததால் வீதிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் வடிய இடமின்றி குளம் போல தேங்கியது. இதனால் அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் தண்ணீரில் மூழ்கின. குடியிருப்பு பகுதிகள்இ கடைகள் உள்ளிட்ட இடங்களிலும் தண்ணீர் புகுந்தது. இதனால் பாதுகாப்பான பகுதிகளில் 2இ700 பேர் தங்கவைக்கப்பட்டனர்.

மஸ்கட் சர்வதேச விமான நிலையத்திலும் தண்ணீர் தேங்கியது. இதன் காரணமாக விமான சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மஸ்கட்டில் ருசேல் தொழிற்பேட்டை பகுதியில் பெய்த கனமழை காரணமாக வீடு ஒன்று இடிந்து விழுந்தது. இந்த வீட்டில் இருந்த 2 ஆசிய தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்த சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது..

பெற்றோர்கள் தங்களது குழந்தையை கவனமுடன் பார்த்து வர அறிவுறுத்தப்பட்டனர். வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. அவசர சேவையில் உதவிட ராணுவம் தயார் நிலையில் இருப்பதாக சுல்தான் ஆயுதப்படையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களம்

Related Articles

Back to top button


Thubinail image
Screen