...
செய்திகள்

ஓமானிற்கு வீட்டு வேலைக்காக சென்றிருந்த 16 இலங்கை பெண்கள் நாடு திரும்பினர்

ஓமானில் விட்டு பணியாளர்களாக சென்று பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளான 16 இலங்கை பெண்கள் நாடு திரும்பியுள்ளனர்.

அவர்கள்  ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு சுற்றுலா விசாவில் சுற்றுலா முகவர்களால் அழைத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து தரைவழியாக ஓமனுக்கு வீட்டு பணிப்பெண்களாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

பின்னர் அவர்கள் பாலியல் துன்புறுத்தல், தாக்குதல் மற்றும் முதலாளிகளால் ஊதியம் வழங்கப்படாமை போன்ற காரணங்களினால் தாம் பணிபுரிந்த வீடுகளை விட்டு வெளியேறி ஓமானில் உள்ள இலங்கை தூதரகத்தில் பாதுகாப்பினை நாடியுள்ளனர்.

தொடர்ந்து தூதரகத்தின் பாதுகாப்பு தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

இவர்கள் இரத்தினபுரி, பதுளை, கண்டி, குருணாகல், சிலாபம், மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

துஷ்பிரயோகத்திற்கு உள்ளான மேலும் 26 இலங்கை வீட்டுப் பணிப்பெண்கள் இன்னும் ஓமானில் பாதுகாப்பான தடுப்பு மையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர், அவர்கள் தற்காலிக கடவுச்சீட்டில் இம்மாத இறுதிக்குள் இலங்கைக்கு நாடு கடத்தப்படுவார்கள் என்றும் எதிபார்க்கப்படுகிறது.

Related Articles

Back to top button


Thubinail image
Screen