...
செய்திகள்

ஓமிக்ரோன் கோவிட் வகையின் வீரிய தன்மை-விளக்கம்

இலங்கை, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் ஒமிக்ரோன் கோவிட் வகை வேகமாகப் பரவாது என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறை பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.

தென்னாப்பிரிக்க விஞ்ஞானிகள் குழுவொன்று மேற்கொண்ட பரிசோதனையில் ஒமிக்ரோன் பற்றிய இந்தத் தகவலைக் கண்டுபிடித்துள்ளதாக அவர் தனது ட்விட்டர் கணக்கில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வைரஸ் நோய்த்தடுப்பு மருந்துகளுக்கு கட்டுப்படவில்லை என்றாலும், பூஸ்டர் தடுப்பூசி மூலம் அதில் இருந்து பாதுகாப்பை பெற்றுக் கொள்ள முடியும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இந்த வைரஸ் குறித்து இன்னும் உறுதியான முடிவுக்கு வர முடியாது எனவும், அதனை ஆய்வு செய்வதற்கு அதிக நேரமும் தரவுகளும் தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen