செய்திகள்

ஓய்வூதிய கொடுப்பனவு நாளை மறுதினம்.!

இம்மாத்திற்கான ஓய்வூதிய கொடுப்பனவு நாளை மறுதினம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓய்வூதிய கொடுப்பனவானது உரிய ஓய்வூதியதாளரின் வங்கி கணக்கில் வைப்பிலிடப்படும் எனவும் அதனை பெற்றுக்கொள்வதற்கு ஓய்வூதியதாளர்கள் செல்லும்பட்சத்தில் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முப்படையினரை ஈடுபடுத்தி போக்குவரத்து வசதிகள் ஒழுங்கமைக்கப்படவுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்த்ர சில்வா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் விசேட ஆலோசனைக்கு அமைய, ஓய்வூதிய கொடுப்பனவை வழங்குவதற்குரிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவத் தளபதி குறிப்பிட்டார்.

இதேவேளை ஓய்வூதிய கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்வதற்காக நாளை மறுதினம் வங்கிகள் திறந்திருக்கும் எனவும் இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்த்ர சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

This image has an empty alt attribute; its file name is pension.jpg

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com