உலகம்

கசகஸ்தான் விமான விபத்தில் 15 பேர் பலி

கசகஸ்தானின் அல்மாட்டி விமான நிலையத்திலிருந்து 100 பயணிகளுடன் பயணித்த விமானம் விபத்துக்குளானதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில் சிக்கிய மேலும் 60 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சர்வதேச ஊடகங்கள் இதனை உறுதிப்படுத்தியுள்ளன.
கசகஸ்தானின் பெரிய நகரான அல்மாட்டிலிருந்து தலைநகர் நர்சுல்தானுக்கு பயணமான விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விமான விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை.

எவ்வாறாயினும் விபத்து சம்பவித்த தருணத்தில் விமான நிலைய வளாகத்தில் கடும் பனி கொண்ட காலநிலை நிலவியதாக பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது.

எவ்வாறாயினும் விமான விபத்து தொடர்பில் கண்டறிவதற்கு விசேட ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக கசகஸ்தான் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

Back to top button
image download