செய்திகள்
கஜா புயலின் தாக்கம்: அசௌகரியங்களை எதிர்நோக்கும் யாழ் மக்கள்
கஜா புயலின் தாக்கம் நேற்று இரவு வடக்கின் பல பிரதேசங்களிலும் உணரப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், இன்று அதிகாலை அச்சுவேலி, பத்தமேனி பகுதியில் 12 மரங்கள் முறிந்து விழுந்துள்ளது.
இவ்வாறு முறிந்த மரங்களில் பெரிய பனை மரங்கள் மற்றும் வேம்பு மரம் என்பன அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்ததாகவும் தெரியவந்துள்ளதடன், இந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.