செய்திகள்

கஞ்சிபானி இம்ரானின் தந்தை உள்ளிட்ட 6 பேர் கைது!

போதைப்பொருள் வர்த்தகரான கஞ்சிபானி இம்ரானின் தந்தை, சகோதரர் உள்ளிட்ட 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பூசா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கஞ்சிபானி இம்ரானுக்கு அலைபேசிகள் மற்றும் சார்ஜர் ஆகியவற்றை வழங்குவதற்கு முயற்சித்த குற்றச்சாட்டில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இரண்டு அலைபேசிகள் மற்றும் இரண்டு அலைபேசி சார்ஜர் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த நபர்கள், கஞ்சிபானி இம்ரானுக்கு வழங்கிய பொதியில் இருந்து குறித பொருட்கள் இன்று (12) பிற்பகல் கைப்பற்றப்பட்டுள்ளன.

அதனையடுத்து,  கஞ்சிபானி இம்ரானின் தந்தை, சகோதரர்  உள்ளிட்ட 6 பேரை ரத்கம பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

பொலிஸ் அதிகாரி ஒருவரை அலைபேசி ஊடாக அச்சுறுத்திய குற்றச்சாட்டில், எதிர்வரும் 20 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன அண்மையில் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button