செய்திகள்

கஞ்சிபானி இம்ரானை 9 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவு.

சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழுத் தலைவரான கஞ்சிபானி இம்ரானை எதிர்வரும் 09 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைபடுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

வாழைத்தோட்டம் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட கோரிக்கை யொன்றை ஆராய்ந்ததன் பின்னரே பிரதான நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

20 கிராம் போதைப்பொருளுடன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சுசந்த என்ற கஞ்சிபானி இம்ரானின் உதவியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இதன்போது, வௌிநாட்டில் இருந்த கஞ்சிபானி இம்ரான் தொலைப்பேசி அழைப்பு மூலம் சுற்றிவளைப்பில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவரை அச்சுறுத்தி, தகாத வார்த்தைகளால் தூற்றியதாக குறித்த கோரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தின் சந்தேகநபராக கஞ்சிபானி இம்ரானை பெயரிட தீர்மானித்துள்ளதாக அந்த கோரிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, பொலிஸாரின் கோரிக்கையை ஏற்ற பிரதான நீதவான் கஞ்சிபானி இம்ரானை எதிர்வரும் 09 ஆம் திகதி நீதிமன்றில் முற்படுத்துமாறு சிறைச்சாலை ஆணையாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

Related Articles

Back to top button