செய்திகள்

கஞ்சிபானை இம்ரானுக்கு எதிர்வரும் 20 வரை விளக்கமறியல்.

பாதாள உலக குழுவின் அங்கத்தவரான கஞ்சிபானை இம்ரான்  எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பிலேயே அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர இதனை தெரிவித்துள்ளார்.
புதுக்கடை பிரதம நீதவான் நீதிமன்றத்தில் கஞ்சிபானை இம்ரான் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 07 ஆம் திகதி பொத்துவில் பகுதியை சேர்ந்த 36 வயதான ஒருவர் கொழும்பு வாழைத்தோட்டம் பகுதியில் ஹேரோய்னுடன் கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் வாழைத்தோட்டம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு தொலைபேசியூடாக உயிர் அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில் கஞ்சிபானை இம்ரானுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button