செய்திகள்

கஞ்சிபானை இம்ரான் தொடர்ந்தும் விளக்கமறியலில்

பிரபல பாதாள உலகக் கோஷ்டியின் உறுப்பினரும், போதைப் பொருள் கடத்தல் காரருமான கஞ்சிபானை இம்றான் என்றழைக்கப்படும் மொஹமட் நஜீம் மொஹமட் இம்றான் எதிர்வரும் 09 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை கொழும்பு மேலதிக நீதவான் சுலோசனா அபேவிக்ரம முன்னிலையில் ஆஜர்படுத்திய போது விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் இடம்பெற்ற கொலை சம்பவங்கள், கடத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் சந்தேகநபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து எதிர்வரும் 09 ஆம் திகதி மன்றில் அறிக்கை சமர்பிக்குமாறும் கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Related Articles

Back to top button
image download