செய்திகள்

கஞ்சிபான இம்ரான் மீண்டும் விளக்கமறியலில்.

பொலிஸ் அதிகாரிகள் இருவருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த காரணத்துக்காக சிறையில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலக குழு உறுப்பினரான கஞ்சிபான இம்ரானை எதிர்வரும் 04 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் சிறைச்சாலை அதிகாரிகளால் இன்று  கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தபட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக பொலிஸார் இன்று நீதிமன்றிற்கு அறிவித்தனர்.

முன்வைக்கப்பட்ட விடயங்களை கருத்திற் கொண்ட நீதவான் சந்தேகநபரை எதிர்வரும் 04 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். 

வௌிநாட்டில் இருந்த கஞ்சிபானை இம்ரான் தொலைப்பேசி மூலம் சுற்றிவளைப்பில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்து , தகாத வார்த்தைகளால் தூற்றியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button